- சித்திரை பௌர்ணமி
- கோவிந்தபுத்தூர் காளியம்மன் கோவில்
- தா.பழூர்
- காளியம்மன் கோயில்
- கொள்ளிடம்
- Govindaputhur
- அரியலூர் மாவட்டம்
- சித்திராய்
- காளியம்மன்.…
- காளியம்மன் கோயில்
தா.பழூர், மே 13: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள காளியம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகபூஜை நடைபெற்றது.
இதையொட்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் இந்த வேள்வி யாக பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பவுர்ணமி பூஜையில் காளியம்மனுக்கு பக்தர்கள் மாப்பொடி, பால், தயிர், நெய், இளநீர், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. இதில் வேள்வி யாகம் நடத்தப்பட்டு புனித நீரை அம்மனுக்கு ஊற்றினர். இதனால் தங்களுக்கு சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பின்னர் காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், பத்ர காளியம்மனுக்கு வளையல் அலங்காரமும் நடைபெற்றது. பக்தர்கள் அம்மனுக்கு புனித நீர் ஊற்றும் போது ‘ஓம் சக்தி பராசக்தி’ என பக்தி பரவசத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் அரியலூர், தத்தனூர், கும்பகோணம், சிதம்பரம், மாயவரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தை வரம், திருமண வரம் மற்றும் பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து வழிபட்டனர். கோவிந்தபுத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
The post கோவிந்தபுத்தூர் காளியம்மன் ஆலயத்தில் சித்திரை பவுர்ணமி சிறப்பு யாகபூஜை appeared first on Dinakaran.
