- கீழ்வேளூர் சித்ரா விழா
- சப்தஸ்தான பல்லகா
- கெயில்வெலூர்
- நாகப்பட்டினம் மாவட்டம்
- சுந்தரகுஜாம்பிகை உனோரு
- அட்சயலிங்க சுவாமி கோவில் சித்திரை திருவிழா
- அட்சயலிங்க சுவாமி கோவில் சித்திரை ஏக தின விழா
- சுப்தஸ்தான பல்லக பிரகடனம்
கீழ்வேளூர், மே 14: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏகதின உற்சவ சப்தஸ்தான பல்லாக்கு ஊர்வலம் நடைபெற்றது. அட்சயலிங்க சுவாமி கோயில் சித்திரை ஏக தின உற்சவம் கடந்த 7ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 9ம் தேதி பஞ்சர்த்திகள் படியிறங்குதலும், 10ம் தேதி ஓலை சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் காலை கோயில் இருந்து கல்யாணசுந்தரர், அம்பாள் சுவாமிகள் சப்தஸ்தான பல்லாக்கு கீழ்வேளூர் அனந்தீஸ்வரர் கோயில், அகரக்கடம்பனூர் இராமசாமி பெருமாள் கோயில், கோயில்கடம்பனூர் கைலாசநாதர் கோயில், திருக்கண்ணங்குடி காளஹஸ்தீஸ்வரர் கோயில், பட்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயில், அபிமுக்தீஸ்வரர் கோயில், வடக்காலத்தூர் சிதம்பரேஸ்வரர் கோயில் தேவூர் தேவபுரிஸ்வரர் கோயில் இலுப்பூர் சிதம்பரேஸ்வரர் கோயில், கூத்தூர் கைலாசநாதர், ஓம்பிரகாச விநாயகர் கோயில் ஆகிய 7 ஊர்களுக்கு வீதி உலா காட்சி நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் பட்டு சாத்தி அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். நேற்று இரவு தெப்ப திருவிழா நடைபெற்று நாளை பஞ்சர்த்திகள் யதாஸ்தான பிரவேசம் நடைபெற்று விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பூமிநாதன், திருக்கோயில் பணியாளர்கள், உதயதாரர்கள் செய்திருந்தனர்.
The post கீழ்வேளூர் சித்திரை திருவிழா; 7 ஊருக்கு சப்தஸ்தான பல்லாக்கு ஊர்வலம் appeared first on Dinakaran.
