×

கனடா அமைச்சரவையில் தமிழ்நாட்டு பெண்ணுக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு

டொராண்டோ: கனடாவில் நடந்த தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக மார்க் கார்னி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த அனிதா ஆனந்த்தை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார். இதற்கு முன்பு அனிதா ஆனந்த் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். தற்போது மிகவும் முக்கியமான வெளியுறவுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனிதா ஆனந்த்தின் பெற்றோர்கள் மருத்துவர்கள். அவரது தாயார் சரோஜ் ஒரு மயக்க மருந்து நிபுணர். தந்தை எஸ்.வி. (ஆண்டி) ஆனந்த் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர்.அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர்.

The post கனடா அமைச்சரவையில் தமிழ்நாட்டு பெண்ணுக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Canada ,Toronto ,Liberal Party ,Mark Carney ,Anitha Anand ,Minister of Foreign Affairs ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...