×

வெஸ்ட் இண்டீசுடன் மோதும் இங்கிலாந்து அணியில் ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள்

லண்டன்: ஐபிஎல் போட்டிகளில் ஆடிவரும் ஜோஸ் பட்லர், ஜேகப் பெத்தெல் உள்ளிட்ட வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் நடக்கவுள்ள ஒரு நாள், டி20 போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வரும் 29ம் தேதி முதல் தலா 3 ஒரு நாள் போட்டிகள், டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் மோதும் இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர், ஜேகப் பெத்தெல், வில் ஜேக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில், ஜோஸ் பட்லர், ஐபிஎல்லில் குஜராத் அணியிலும், பெத்தெல் பெங்களூரு அணியிலும், ஜாக்ஸ் மும்பை அணியிலும், ஜோப்ரா ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியிலும் இடம் பெற்றுள்ளனர். தவிர, பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள பில் சால்ட், இங்கிலாந்து டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

The post வெஸ்ட் இண்டீசுடன் மோதும் இங்கிலாந்து அணியில் ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : England ,IPL ,West Indies ,London ,Jos Buttler ,Jacob Bethell ,T20I ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...