×

இந்தியா-பாகிஸ்தான் மோதல்.. மே 19ம் தேதி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி..!!

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து, மே 19ம் தேதி பார்லிமென்ட் குழுவிடம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளிக்க உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாத நிலைகளை குறிவைத்து தகர்த்தது. இதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மே 10ல் திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தானுடனான தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்ற குழுவிடம் வருகிற 19ம் தேதி வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்கிறார். அப்போது அவர் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் குறித்தும், பின்னர் போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற வெளியுறவு நிலை குழுவிடம் அவர் முழு விளக்கத்தை அளிப்பார். அண்டை நாடான வங்காளதேசத்துடன் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் கனடா நாட்டுடனான உறவு உள்பட பல வெளியுறவு பிரச்சினைகள் குறித்து இந்த குழுவிடம் மிஸ்ரி வழக்கமான விளக்கம் அளித்து வருகிறார்.

The post இந்தியா-பாகிஸ்தான் மோதல்.. மே 19ம் தேதி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி..!! appeared first on Dinakaran.

Tags : India ,-Pakistan ,Vikram Misri ,Delhi ,Foreign Secretary ,India-Pakistan conflict ,Indian Army ,Operation Sindoor ,Pahalgam Valley ,Jammu and ,Kashmir… ,Dinakaran ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்