×

அழகர் திருவிழா சிறப்பாக நடந்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

மதுரை, மே 13: சித்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. இங்கு வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சித்திரைத் திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பல்வேறு சாலைகளை புதுப்பிக்கப்படுகிறது. சில இடங்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. அழகர் திருவிழாவை காண கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. இருப்பினும் விழா எவ்வித பாதிப்பும் இன்றி மிகச்சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அதை நாம் கொண்டாடுவோம். விழாவில் பக்தர் ஒருவர் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வந்துள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டிருந்தால், குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அழகர் திருவிழா சிறப்பாக நடந்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : BEAUTY FESTIVAL ,MINISTER ,SEKARBABU ,MADURAI ,HAHAKAR VIGAI RIVER ,TORTURE FESTIVAL ,Madura ,Minister of Indian Affairs ,Sekharbhabu ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...