×

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா; தங்கத்தேர் இழுத்து வழிபாடு

பொள்ளாச்சி, மே 13: கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பாழனிசாமி பிறந்தநாளையொட்டியும், இந்திய ராணுவ வீரர்கள் நலனுக்காகவும், சிறப்பு புஜை வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

இதில், அதிமுக அமைப்பு செயலாளர் தாமோதரன் எம்எல்ஏ கலந்துகொண்டு, தங்கதேரை இழுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். சூலூர் எம்எல்ஏ கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரிவாசு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம், பேரூராட்சி செயலாளர் விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா; தங்கத்தேர் இழுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Pollachi ,Coimbatore Suburban South District ,Jayalalithaa Peravai ,Anaimalai Masaniamman Temple ,AIADMK ,General Secretary ,Golden ,
× RELATED கூலி உயர்வு கேட்டு கறிக்கோழி வளர்ப்பு...