×

சேர்ந்தபூமங்கலத்தில் சித்திரை திருவிழா

தேரோட்டம் ஆறுமுகநேரி, மே 13: சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில், நவகைலாயங்களில் சுக்கிரன் ஸ்தலமாகும். இங்கு கடந்த 3ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள், வீதியுலா நடந்தது. கடந்த 10ம் தேதி பச்சை சாத்தி வழிபாடு, வெட்டும் குதிரை உற்சவம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து சுவாமி -அம்பாள் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட சைவ வேளாளர் அபிவிருத்தி சங்க பொருளாளர் குப்புசாமி, ஆத்தூர் சைவ வேளாளர் அபிவிருத்தி சங்க செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை கணேசபட்டர், மணிகண்டன் ஆகியோர் நடத்தினர். திருவிழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, ஆய்வர் சிவகாமசுந்தரி, எழுத்தர் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post சேர்ந்தபூமங்கலத்தில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Chithirai festival ,Serndaphoomangalam ,Chariot Arumuganeri ,Kailasanathar temple ,Athur ,Venus ,Navaikalayams ,Swami ,Chithirai festival in ,
× RELATED சென்னை காவல் துறையில் 21...