×

உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கொட்டி கிடந்த மருந்து பாட்டில்கள்

உளுந்தூர்பேட்டை, மே 13: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக பயன்படுத்தப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்கள் கொட்டி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அதனை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். மேலும் அந்த மருந்து பாட்டில்கள் குழந்தைகளுக்கு சளி, இருமல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து என்றும் ஒரே இடத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களை அங்கு கொட்டியது யார் என்றும் தெரியவில்லை. அட்டை பெட்டியில் கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கொட்டி கிடந்த மருந்து பாட்டில்கள் appeared first on Dinakaran.

Tags : Olaiyanur National Highway ,Ulundurpet ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை