×

சாலையோரம் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றம்

நாமக்கல், மே 13: நாமக்கல், மோகனூர் பகுதியில் சாலையோரம் இருந்து கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின்படியும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படியும், நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். அதன்படி நாமக்கல், மோகனூர் பகுதியில் சாலையேரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பொக்லைன் கொண்டு அப்புறப்படுத்தினார்கள். மேலும், சாலையோரங்களில் இது போன்ற கொடிக்கம்பங்களை வைக்கவேண்டாம் என அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண்டனர்.

The post சாலையோரம் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal, Moganur ,Madurai Branch Order ,Chennai High Court ,Namakkal District Collector's Advice ,Dinakaran ,
× RELATED விபத்துகளை தடுக்க வேகத்தடை அவசியம்