×

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 7 பொறுப்பாளர்களை மண்டல அளவில் நியமிக்க முடிவு: திமுக தலைமை கழகம் திட்டம் என தகவல்

சென்னை: 2026ம் ஆண்டு பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் மண்டல அளவில் 7 பொறுப்பாளர்களை நியமிக்க தலைமை கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்னும் 10 மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதனை எதிர்க்கொள்ளும் ஆயத்த பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, பூத் கமிட்டி அமைப்பது, மாவட்ட வாரியாக கட்சியினருடன் ஆலோசனை என பணிகளை வேகப்படுத்தி வருகின்றன.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர அதிமுகவும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் திமுகவும் மும்முரம் காட்டி வருகிறது. இதில் அதிமுகவை மிரட்டி கூட்டணி வைத்துள்ள பாஜவின் உறவு குறித்து அதிமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை விமர்சனங்களை முன்வைத்து வருவதால் தொடர்ந்து சலசலப்பு நீடித்து வருகிறது. மற்றொரு புறம் அசுர பலத்துடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரக்கூடிய தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும், திமுக சார்பில் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக, மக்களை நேரில் சென்று சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். அதன்படி, நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருசேர களப்பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக மண்டல அளவில் 7 பொறுப்பாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தலைமைக்கழக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கனிமொழி எம்பி, ராசா எம்.பி ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெறலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 7 பொறுப்பாளர்களை மண்டல அளவில் நியமிக்க முடிவு: திமுக தலைமை கழகம் திட்டம் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Dimuka Leadership Corporation Project ,Chennai ,Dimughal ,2026 general elections ,Tamil Nadu Legislature ,Dimuka Chief Corporation Project ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...