- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- கரம்பாக்குடி
- புதுக்கோட்டை
- திமுக வடக்கு ஒன்றிய நகர்ப்புறக் கழகம்
- மருதன் கோன் ஹோட்டல்
- நால்ரோடு கலைஞர் திடல்
- மு.கே ஸ்டாலின்
கறம்பக்குடி, மே 12: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றியம் நகர கழகம் சார்பாக மருதன் கோன் விடுதி நால்ரோடு கலைஞர் திடலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, திமுக நகர செயலாளரும் பேரூராட்சி தலைவருமான முருகேசன் வரவேற்றார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு, நகர அவை தலைவர் எம். ஏ.லத்தீப், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, ஒன்றிய அவை தலைவர் வின்சென்ட், மாவட்ட பிரதிநிதிகள் செல்வராஜ் வெற்றி வேந்தன், தெட்சணாமூர்த்தி, அப்பு, ராஜேந்திரன், சதாசிவம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு, வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, தமிழ்நாட்டில் தமிழ் மக்களை தமிழகத்தை காப்பாற்ற கூடிய தலைவராக தமிழக முதல்வர் விளங்கி வருகிறார் என்றும் திராவிட மாடல் அரசின் சாதனை கள் அகில இந்திய அளவில் பேச பட்டு வருகின்றன என்றும் மீண்டும் 2026 ஆம் ஆண்டில் ஆட்சி அமைக்க போவது திராவிட மாடல் அரசின் அரசு தான் என்று கூறி சிறப்புரை ஆற்றினார் பொது கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் எஸ் எஸ் கருப்பையா கந்தர்வக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் குறிஞ்சி வாணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் திமுக அனைத்து சார்பு அணியினர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக மாவட்ட பிரதிநிதி ஜி ரமேஷ் நன்றி கூறினார்.
The post கறம்பக்குடியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா பொது கூட்டம் appeared first on Dinakaran.
