×

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி

புதுக்கோட்டை, மே 12: புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்  நரசிம்மர் ஜெயந்தி வைபவ பூஜை நடந்தது. புதுக்கோட்டை தெற்கு 4-ஆம் வீதி மார்க்கெட் பகுதியில் உள்ள  ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில்  நரசிம்ம ஜெயந்தி வைபவ பூஜை சிறப்பாக நடைபெற்றது.  நரசிம்மர், லெட்சுமிநரசிம்மர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், நொங்கு மற்றும் பழங்கள் வைத்து பூஜைகள் நடந்தது. மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். அனைவருக்கும் இளநீர், நொங்கு மற்றும் பழங்கள் அருட்பிரசாதம் வழங்கப்பட்டன.

The post புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி appeared first on Dinakaran.

Tags : Narasimha Jayanti ,Pudukkottai Anjaneyar ,Temple ,Pudukkottai ,Anjaneyar Temple ,Hanuman Church ,Anjaneyar ,Pudukkottai South 4th Street Market ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்