ராமநாதபுரம்:பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்று வழங்கினார். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசால் ஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் மாணவ,மாணவிகள், அலுவலர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post பாரதிதாசன் பிறந்த நாள் வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்று appeared first on Dinakaran.
