×

மருந்து கடையில் ரூ.10 ஆயிரம் திருட்டு

 

விழுப்புரம்: மருந்து கடையில் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் கணபதி நகரில் வசிப்பவர் வெங்கடசுப்பிரமணிய செல்வம்(55). இவர் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்து கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

விற்பனை முடிந்து கடந்த 9ம் தேதி இரவு மருந்து கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. மேலும் மேஜை பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மருந்து கடையில் ரூ.10 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Venkatasubramania Selvam ,Ganapathy Nagar, Villupuram ,Nehruji Road ,Villupuram… ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை