×

கோவை மாவட்ட ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டியில் 33 பேர் தேர்வு

 

கோவை: கோவை மாவட்ட ஹாக்கி அணியின் வீரர்களுக்கான முதல் கட்ட தேர்வு போட்டி சரவணம்பட்டியில் உள்ள சுகுணா ஹாக்கி டர்ப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், கோவையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 59 பேர் பங்கேற்றனர். இதில், மாணவர்களின் உடற்தகுதி மற்றும் திறன்களை வைத்து 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான 33 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதற்கான பயிற்சி முகாம் சுகுணா ஹாக்கி டர்ப் மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் சிறப்பாக விளையாடும் 18 பேரை இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தேர்வான வீரர்கள் இறுதியில் வேலூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் விளையாடுவார்கள் என தமிழ்நாடு ஹாக்கி சங்கப் பொதுச் செயலாளர் பி. செந்தில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

The post கோவை மாவட்ட ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டியில் 33 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore district hockey team ,Coimbatore ,Sukuna Hockey Turf Ground ,Saravanampatti ,Dinakaran ,
× RELATED கிராம பகுதிகளில் வேலை வாய்ப்பு திட்டம்