×

செவிலியர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: செவிலியர் தினத்தையொட்டி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : உலகம் முழுவதும் மே 12 அன்று செவிலியர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. செவிலியர்கள் மருத்துவமனைகளில் இன்றியமையாத ஊழியர்களாக நோயாளிகளையும், வீடுகளில், ஆதரவற்ற விடுதிகளில் குழந்தைகளையும், முதியோரையும் அன்பாக, ஆதரவாக, கவனித்துக்கொள்ளும் பணி போற்றுதலுக்குரியது.

மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு செவிலியர்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்றுவது பாராட்டத்தக்கது. சாதாரண மருத்துவ சேவையை, போர்க்கால மருத்து சேவையை சாதி மதம் பார்க்காமல் சகிப்புத் தன்மையுடன் மேற்கொள்வதே செவிலியர்களின் மகத்தான பணியாகும். ஒன்றிய மாநில அரசுகள் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செவிலியர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Nurses Day ,G.K. Vasan ,Chennai ,TAMAGA ,president ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை