×

கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

கந்தர்வகோட்டை, மே 11: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நந்தி ஈஸ்வரருக்கு சனி மஹா பிரதோஷத்தையொட்டி எண்ணெய் காப்பு செய்து, ஆலய வாளகாத்தில் உள்ள புனித நீரால் நீராட்டி, பால், தயிர், பச்சரிசி மாவு, பஞ்ச காவ்யம், திருமஞ்சன பொடி, இளநீர், வாழைப்பழம், சாந்து குடி அபிஷேகமும், பலாப்பழ தேன், பஞ்சாமிர்தம் சந்தனம் திருநீறு, நல்லெண்ணெய் நெய் போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும், ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில், மட்டங்கால், சிவந்தான்பட்டி, காட்டு நாவல், துலுக்கன்பட்டி, சுத்தம்பட்டி, நெப்புகை, அக்கச்சிபட்டி ஆகிய பகுதியை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

The post கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Gandarvakottai Shiva Temple ,Gandarvakottai ,Shani ,Nandi Ishwarar ,Amaravati ,Amman ,Udanurai ,Aapatsakayeswarar Temple ,Gandarvakottai, Pudukottai district ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்