- அரசு கலைக் கல்லூரி
- செம்மொழி தினம்
- Jayankondam
- ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
ஜெயங்கொண்டம், மே 11: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செம்மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் பாராட்டினார். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்த கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 6ம் தேதியை தமிழக அரசு செம்மொழி தினமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு கலைஞரின் பிறந்த தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் மாணவர்களிடையே பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தி, மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேச்சுப்போட்டியில் தமிழ்த்துறையின் முதலாம் ஆண்டு மாணவி தனலட்சுமி முதல் பரிசையும் கட்டுரைப் போட்டியில் தமிழ்த்துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் பாரதி கண்ணன் இரண்டாம் பரிசினையும் பெற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, தமிழ்த்துறை தலைவரும் நுண்கலை மன்ற பொறுப்பாசிரியருமான முனைவர் வடிவேலன், கல்லூரி முதல்வர் இராசமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.
The post செம்மொழி தின போட்டி வெற்றி பெற்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.
