×

திமுக தெருமுனை பிரசாரம்

 

தேன்கனிக்கோட்டை, மே 10: கெலமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் இருதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, பேவநத்தம், தொட்டபேளூர் ஆகிய கிராமங்களில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் டாக்டர் விஜய், திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய அவைத்தலைவர் திம்மராஜ், துணை செயலாளர்கள் வெங்கடராஜ், மல்லேஷ், காமாட்சிமுருகேசன், மாவட்ட பிரதிநிதி நரசிம்மமூர்த்தி, ஆர்வப்பா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கில்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK Street Front Campaign ,Thenkani Kottai ,Kelamangalam West Union DMK ,Tamil Nadu government ,Iruthukottai ,Chandanapalli ,Bevanatham ,Thottapelur ,Dr. ,Vijay ,DMK… ,Dinakaran ,
× RELATED வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்