×

குளித்தலை அரசு கலைக் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு

 

குளித்தலை மே 10: குளித்தலை டாக்டர் அரசு கலைக்கல்லூரி முதல்வராக முனைவர் சுஜாதா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கரூர் மாவட்டம் குளித்தலையில் டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் புதிய முதல்வராக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றிய முனைவர் த.சுஜாதா பணி உயர்வு பெற்று நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கல்லூரிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வருக்கு, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

The post குளித்தலை அரசு கலைக் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Kulithalai Government Arts College ,Kulithalai ,Sujatha ,Kulithalai Doctor Government Arts College ,Kalaignar Government Arts College ,Kulithalai, Karur district ,Andipatti Government ,Theni ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்றவர் கைது