×

பள்ளி வேன் மீது பைக் மோதி விபத்து

கரூர், டிச.31: கரூர் தாந்தோணிமலை அருகே முன்னாள் சென்ற தனியார் பள்ளி வேன் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகிறார். கரூர் தாந்தோணிமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்வதற்காக வேனை ஓட்டி வந்தவர், வேனை வளைவில் திருப்பிய போது, பின்னால் வந்த பைக் வேனின் பின்புறத்தில் மோதியது.

இதில், காயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த தாந்தோணிமலை போலீசார், விபத்தில் சிக்கிய நபர் யார்? என்பது குறித்தும், விபத்து குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Karur ,Thanthonimala ,Thanthonimala Regional Transport Office ,Karur… ,
× RELATED காவிரி படுகை விவசாயத்தை மேம்படுத்த...