- குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி
- குலிதலை
- கரூர்
- குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி போதைப்பொருள் தடுப்புக் குழு
- நாட்டு நலப்பணித் திட்டம்
குளித்தலை, ஜன. 1: குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி போதை ஒழிப்புக்குழு, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் த. சுஜாதா தலைமை வகித்தார்.
முன்னதாக போதை ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைரமூர்த்தி வரவேற்றார். விழிப்புணர்வு கருத்துரை முனைவர்முருகேசன் உதவி ஆணையர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை வழங்கினார். மேலும் செந்தில் கோட்டக்கலால் அலுவலர் குளித்தலை மற்றும் முனைவர் மகேஸ்வரி மனநல ஆலோசகர், மதுவிலக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் கோகிலா ஆகியோர் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.
இதில் கணிதத்துறையை சேர்ந்த மாணவிகள் நித்ய, உஷாராணி, ஜெனிபர், தாரணி, பாக்யலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வு மவுனநாடகம் நடித்தனர். குழுநடனம் சுகாசினி, தேன்மொழி, தமிழ்துறை மாணவர்கள் பிரவீன், சந்தோஷ் தனிப்பாடல் மற்றும் தனிநடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர், மாணவ மாணவியர்க்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கணிதத்துறைத் தலைவர் உமாதேவி, மின்னணுவியல் துறை இணைப் பேராசிரியர் மகேந்திரன், கணிதத்துறை பேராசிரியர் பத்மபிரியா மற்றும் அனைத்துத்துறை பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் பாபுநாத் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பேராசிரியர்கள் சக்திவேல் சுபத்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
