×

கடைகள், நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 5ம் தேதி 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடந்த மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்” என அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, 5.6.2025 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கடைகள், நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Government Secretary ,Department of Labour Welfare ,and Skill ,Development ,Veera Raghava Rao ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...