×

நாங்கூர் கோயிலில் சித்திரை பெருவிழா பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா

 

 

சீர்காழி, மே 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ தளங்களில் ஒன்றான நாராயணன் பெருமாள் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு 5ம் நாள் விழாவில் ஹம்ச வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post நாங்கூர் கோயிலில் சித்திரை பெருவிழா பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Chitrai Perumal Hamsa ,Road ,Nangur Temple ,Sirkazhi ,Chitra Festival ,Narayanan Perumal Temple ,Nangur ,Sirkazhi, Mayiladuthura District ,Perumal Road ,Hamsa Vahana ,Chitrai ,Perumal Hamsa ,
× RELATED சென்னை காவல் துறையில் 21...