- நீச்சல் பயிற்சி
- கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க
- முகாம்
- தின மலர்
கிருஷ்ணகிரி, மே 8: கிருஷ்ணகிரியில், 3ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாமில் 135 பேர் பங்கேற்றுள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது வழக்கம். அதன்படி, இவ்வாண்டு, 5 கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் கட்ட நீச்சல் பயிற்சி கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி துவங்கி 13ம் தேதி வரையிலும் நடைபெற்றது.
2ம் கட்ட பயிற்சி கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரையிலும் நடந்தது. தொடர்ந்து 3ம் கட்ட பயிற்சி முகாம் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஆண்கள் 84 பேரும், பெண்கள் 51 பேரும் என மொத்தம் 135 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். 3ம் கட்ட நீச்சல் பயிற்சியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் துவக்கி வைத்தார்.
இதேபோல், 4ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், 5ம் கட்ட பயிற்சி முகாம் வரும் 27ம் தேதி முதல் ஜூன் மாதம் 8 வரையும் நடைபெற உள்ளது. பயிற்சிகள் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தலா ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கட்டணமாக, ரூ.1 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் https://sdatservices.tn.gov.in/#/membership-booking/register என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தெரிவித்தார்.
The post கிருஷ்ணகிரியில் 3ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.
