×

மாசங்கர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் பாஜ எம்எல்ஏக்கள் மனு

 

புதுச்சேரி, மே 8: புதுவை பாஜக பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர். புதுச்சேரி காமராஜர் தொகுதியில் பாஜகவின் முன்னாள் துணைத் தலைவரான உமாசங்கர் கடந்த மாதம் 26ம்தேதி நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த ரவுடி கர்ணா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும் உமாசங்கர் கொலை தொடர்பாக பல்வேறு குழப்பங்களும், மாறுபட்ட கருத்துக்களும் பாஜக கட்சி வட்டாரத்தில் நிலவின. இந்த நிலையில் காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், வில்லியம் ரிச்சர்ட்ஸ், பாஜ ஆதரவு எம்எல்ஏக்கள் சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனுவாசன் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.

அங்கு ஒன்றிய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கல்யாணசுந்தரம் தலைமையில் 5 பேரும் ஒன்றிய புலனாய்வு துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், புதுச்சேரி பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை தொடர்பாக சிபிஐ மூலம் நீதி விசாரணை செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

The post மாசங்கர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் பாஜ எம்எல்ஏக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,Union ,Minister ,CBI ,Masankar ,Puducherry ,Union Minister ,Delhi ,BJP ,Umashankar ,-president ,Puducherry Kamaraj ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்