- எஸ்ஐ
- சிவகாசி
- சிவகாசி கிழக்கு காவல் நிலையம்
- எஸ்ஐ சுந்தர்ராஜ்
- மணிகண்டன்
- மாரிச்செல்வம்
- விஜய்
- பத்ரகாளியம்மன் காலனி
சிவகாசி, மே 8: சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேசன் எஸ்ஐ சுந்தரராஜ் மற்றும் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக பத்ரகாளியம்மன் காலனியை சேர்ந்த மணிகண்டன், மாரிச்செல்வம், விஜய், ஆகியோரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணை கைதிகளுக்கு ஆதரவாக போலீஸ் ஸ்டேசன் வந்த காளிராஜன் மகன் சிவராமன் (25) என்பவர் அங்கு பணியில் இருந்த எஸ்ஐ சுந்தர்ராஜை பணி செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ்ஐ சுந்தரராஜ் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, வாலிபர் சிவராமன் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தார்.
The post எஸ்ஐக்கு கொலை மிரட்டல் வாலிபர் கைது appeared first on Dinakaran.
