டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரும், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா (38) அறிவித்துள்ளார். இது தொடர்பாக, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடப் போவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது மும்பை ஐபிஎல் அணிக்காக ஆடி வரும் ரோகித் சர்மா, ஏற்கனவே, கடந்த 2024ல், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ரோகித் சர்மா, 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 12 சதங்கள், 18 அரை சதங்களுடன் 4301 ரன்களை குவித்துள்ளார். ரோகித் ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து, இங்கிலாந்துடனான 5 டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளார்.
The post டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு appeared first on Dinakaran.
