×

தீவிரவாதிகளின் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு மையம் அழிப்பு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷகர்கார் அருகே உள்ள சர்ஜால் என்ற இடத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது. அந்த முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளின் நவீன தொலைதொடர்பு சாதனங்கள் அழிக்கப்பட்டன.

இந்த முகாமில் உள்ள ஒரு அறையில்தான் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு மையம் இயங்கி வந்துள்ளது. அங்கிருந்த தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர். இந்திய ராணுவத்துக்கு பெரிய தலைவலியாக இருந்த முகாம் தற்போது அழிக்கப்பட்டுள்ளது.

 

The post தீவிரவாதிகளின் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு மையம் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Pakistan ,Operation Sindh ,Sharjal ,Shakargarh ,Punjab ,communication ,control center ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் லேசான நிலநடுக்கம்