×

சபரிமலை தந்திரி மீண்டும் சிறையில் அடைப்பு

திருவனந்தபுரம்: மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் மூத்த தந்திரியான கண்டரர் ராஜீவரரை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். சிறையில் வைத்து இவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தந்திரியை போலீசார் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இவரது உடல்நிலை சீரானதை தொடர்ந்து நேற்று மீண்டும் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Sabarimala Thanthi ,Thiruvananthapuram ,Sabarimala Thanthi Kandara Rajeevaar ,Thanthi Kandara Rajeevaar ,Sabarimala ,Special Investigation Team ,SIT ,Thiruvananthapuram… ,
× RELATED டெல்லி உலக புத்தக கண்காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு அரங்கு!!