சென்னை: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது.
மேலும், சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க வர்த்தகப் போர், நாடுகளுக்கு இடையேயான பதற்றச் சூழல் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த தங்கத்தின் விலை, மே 5ம்தேதி ரூ.160 அதிகரித்தது.
நேற்று முன்தினம் காலை ஒரு பவுன் தங்கம் ரூ.72,200க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் 2வது முறையாக ஒரு பவுன் ரூ.600 உயர்ந்து ரூ.72,800க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.9,100க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.72,600க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.9,075க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுவாக, இரண்டு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டால் பங்குச்சந்தை சரியும் மற்றும் தங்கம் விலை உயரும் என்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா -பாகிஸ்தான் போர் பதற்றம் இருந்து வரும் நிலையில் தங்கம் விலை நேற்று சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது appeared first on Dinakaran.
