திருக்காட்டுப்பள்ளி, மே 7: திருக்காட்டுப்பள்ளியில் 37 ம் ஆண்டு சித்திரைத் திருவிழா நடந்தது.திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் பேருந்து நிலைய டாக்ஸி, டூரிஸ்ட், மினி , ஆட்டோ உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்து 37ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், காவடி எடுத்தும், வேல் குத்தியும் ஊர்வலமாக வந்தனர். கடைவீதி வழியாக பஸ் ஸ்டாண்ட்டை அடைந்து பின் கோயிலை சென்றடைந்து தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர்.
இதையடுத்து சுவாமிக்கு பால், தேன், தயிர், திரவிப்பொடி, பஞ்சாமிர்தம் என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேவார இன்னிசை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post திருக்காட்டுப்பள்ளியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் 37ம் ஆண்டு சித்திரை திருவிழா பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.
