×

மதுரை சித்திரை திருவிழா.. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டு விநியோகம்..!!

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டு விநியோகப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த எப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிலையில் கோயிலில் இன்று பட்டாபிஷேகமும், மே 7ம் தேதி திக்கு விஜயம், 8ம் தேதி திருக்கல்யாணம், 9ம் தேதி திருத்தோரோட்டம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாளை மறுநாள் நடைபெற உள்ள மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கான விதிமுறைகள் பின்வருமாறு;

8ம் தேதி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

ரூ.200 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 3000 பேரும், ரூ.500 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 2000-க்கும் மேற்பட்டோருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் புக் செய்த பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கட்டண பாஸ் வழங்கப்படுகிறது

சிறப்பு கட்டண சீட்டு பெற மதுரை மேல சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

The post மதுரை சித்திரை திருவிழா.. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டு விநியோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Chithirai Festival ,Meenakshi Thirukalyanam ,Madurai ,Madurai Meenakshi Sundareswarar Temple Chithirai Festival ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...