×

உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை!!

சென்னை: தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு இறந்த 70 வயது முதியவர் ராஜாராமன் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக 3 சக்கர குப்பை வண்டியில் பொதுவெளியில் எடுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இந்த வழக்கில் மரணத்திற்கு பிந்தைய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது மனித உரிமை மீறிய செயல் எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தார்.

அதன்படி, உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதை உணர்வு பூர்வமான அணுக வேண்டும் எனக்கூறி, தமிழகம் முழுவதும் உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை!! appeared first on Dinakaran.

Tags : Human Rights Commission ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Solingar Government Hospital ,Vellore district… ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...