- பா.ம.க.
- சித்திரை பௌர்ணமி மாநாடு
- கிழக்கு கடற்கரை சாலை
- மாவட்ட காவல்துறை
- மாமல்லபுரத்தில்
- பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு
- மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை
- தின மலர்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி நடைபெறும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள், மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்ல தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பாமக சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.
சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது. சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது.
அந்த இலட்சினையில் “இனமே எழு உரிமை பெறு” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முழு நிலவு மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள், மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. கடலூர், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல், செங்கல்பட்டு வழியாக மாநாட்டுத் திடலை அடைய அறிவுறுத்தப்பட்டது. வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்ல தடை: மாவட்ட காவல்துறை உத்தரவு appeared first on Dinakaran.

