×

உடையார்பாளையத்தில் காகித ஆலை அமைக்க வேண்டும்

 

ஜெயங்கொண்டம்,மே 6: உடையார்பாளையத்தில் காகித ஆலை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றிய 10வது மாநாடு உடையார்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் மாநாட்டு பேரணியுடன் நடைபெற்றது. மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம்
மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஜெயங்கொண்டம் ஒன்றிய புதிய செயலாளராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். துணை செயலாளர்களாக ராஜ்குமார், காத்தவராயன் பொருளாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டிமடம் ஒன்றிய ஒருங்கிணைப்பு குழு செயலாளராக பாலா என்கிற பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டார். இளையபெருமாள் நல்லூர் ஊராட்சி பள்ளி விடையில் பழங்குடி மக்கள் வாழ்ந்த நாலே முக்கால் ஏக்கர் இடத்தில் தண்ணீர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், உணவு வகைகளும், பறவைகள் தாகம் தீர்க்க பாத்திரத்தில் தினந்தோறும் மாடி வீட்டின் மேல் கூரையில் தண்ணீர் வைக்க வேண்டும் என்றும் கடைவீதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post உடையார்பாளையத்தில் காகித ஆலை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Udayarpalayam ,Jayankondam ,Communist Party of India ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...