×

மூணாறு-மறையூர் சாலையில் கார் விபத்தில் 6 பேர் காயம்

 

மூணாறு, மே 6: கேரளா மாநிலம் மூணாறு-மறையூர் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலாப் பயணிகளின் வாகனம் விபத்துக்குள்ளான அதில் 6 பேர்க்கு காயமடைந்தனர். மலப்புரம் பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் குழு காரில் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மூணாறில் இருந்து மறையூர் அருகே உள்ள காந்தளூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் பயணம் செய்த கார் தலையார் எஸ்டேட் பஜார் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்த 6 இளைஞர்களும் காயமடைந்தனர். இதில் இரண்டு இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மற்றும் எதிரே வந்த வாகனத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து மறையூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மூணாறு-மறையூர் சாலையில் கார் விபத்தில் 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Munnar-Maraiyur ,Munnar ,Munnar-Maraiyur road ,Kerala ,Malappuram ,Dinakaran ,
× RELATED ரூ.10 ஆயிரம் கோடிக்கு போலி மருந்தில்...