- சிவகங்கை
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டுச் சங்கம்
- தமிழ்நாடு அரசு
சிவகங்கை, டிச.24:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் நடைமுறையில் உள்ள ஒப்பந்த முறை மற்றும் தினக்கூலி முறைகளை ரத்து செய்ய வேண்டும். எம்ஆர்பி தொகுப்பின் கீழ் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட மொத்தம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
