×

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சிப்காட் தொழில் பூங்கா முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜா எம்எல்ஏவுக்கு நன்றி

சங்கரன்கோவில்,மே 6: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜா எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து கிராமசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு திருவேங்கடம் அருகே தெற்கு குருவிகுளம் ஊராட்சி சார்பில் அழகுநேரியில் கிராமசபை சிறப்பு கூட்டம் பஞ். தலைவர் குணசுந்தரி தலைமையில் ஒன்றிய அலுவலக பற்றாளர் பிச்சைக்கனி முன்னிலையில் நடந்தது. இதில் சமூக ஆர்வலரும், முன்னாள் யூனியன் கவுன்சிலருமான கண்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சின்னக் கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.300 கோடியில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெரும் வகையில் புதிய சிப்காட் தொழிற்சாலை அமைவதற்கு கடந்த பட்ஜெட் கூட தொடரில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கும், பரிந்துரைத்த தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏவிற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் குருவிகுளத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தமைக்கும் ராஜா எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலாளர் ஞானமணி நன்றி கூறினார்.

The post சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சிப்காட் தொழில் பூங்கா முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜா எம்எல்ஏவுக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Assembly ,Sankaranco ,Chipcat Industrial Park ,Chief Mu. K. ,Stalin ,King ,SANKARANKO ,CHIPCAT INDUSTRY PARK ,Raja MLA ,South Kuruvikulam Uratchi ,Thiruvengadam ,King MLA ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்