×

நீட் தேர்வு எழுதினால் எப்படி தரமான மருத்துவர் வருவார்கள்: ஒன்றிய அரசுக்கு சீமான் கேள்வி

சென்னை: அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம், சானடோரியம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: பலமுறை நீட் தேர்வை கண்டித்து எதிர்த்து பேசி இருக்கிறேன். நீட் சிறப்பு பயிற்சி என்கிற பெயரில் பல கோடி சம்பாதிக்கிறார்கள். நீட் தேர்வை அமெரிக்க தனியார் நிறுவனம் நடத்துகிறது. நீட் தேர்வு எழுதினால் எப்படி தரமான மருத்துவர் வருவார்கள். சிற்றூரில் இருக்கும் மாணவனுக்கு மருத்துவ கனவு வரக்கூடாதா? இது பாதிக்கும் என தெரிந்து எப்படி இந்த முறையை கொண்டு வந்தீர்கள்.

ஆடைகள் கட்டுப்பாடு எந்த மாநிலத்தில் இப்படி உள்ளது. மூக்குத்தி, தோடு எவ்வளவு பெரிசு. இதில் பிட் எடுத்துக்கொண்டு போய் தேர்வெழுதுவார்களா? ஆனால் ஓட்டு போடும் பெட்டியில் எதும் நடக்காது என்கிறார்கள். இதை நம்பச் சொல்கிறாயா, கல்வி ஏன் சுகமாய் இல்லாமல் சுமையாய் இருக்கு. பொத்தானில் பிட் வைக்க முடியுமா அதை ஏன் அகற்ற சொல்கிறீர்கள். என் பிள்ளைகளை அழ வைத்து தேர்வு வைக்கிறீர்கள், என்ன மன நிலையில் தேர்வு எழுதுவார்கள்.

 

The post நீட் தேர்வு எழுதினால் எப்படி தரமான மருத்துவர் வருவார்கள்: ஒன்றிய அரசுக்கு சீமான் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Seeman ,Union Government ,Chennai ,Sanatorium ,Tambaram ,Ayothidas Pandit ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...