×

திருத்துறைப்பூண்டி தூர்வாரும் பகுதிகளில் தகவல் பலகை வேண்டும்

 

திருத்துறைப்பூண்டி, மே 5: திருத்துறைப்பூண்டியில்,தூர்வாரும் பகுதிகளில் தகவல் பலகை வேண்டும் எனநுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக, ஆறு, குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றில் ஆழப்படுத்தி தூர்வாரும் பணிகளை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒப்பந்தக்காரர்கள் முன்னரே பணி ஒதுக்கப்பட்டும், மிக மெதுவாக மேட்டூர் அணை திறக்கும் வரை வேலையை வளர்த்துகின்றனர். இதனால், ஒப்பந்தகாரர்கள் தூர் வாரும் பணியை முடிக்கிறார்களா என்பதை பொதுமக்களும் கண்காணிக்க ஏதுவாக தூர்வாரப்படும் ஆறு குளங்களில் கரைப்பகுதியில் ஒப்பந்தக்காரர்கள் பெயர் முகவரி போன் நம்பர் ஒதுக்கப்பட்ட தொகை, தூர்வார பணி காலம் குறித்த தகவல்களை விளம்பர பலகை எழுதப்பட்டு பொதுமக்கள் அறியும் படி தகவல் பலகை வைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post திருத்துறைப்பூண்டி தூர்வாரும் பகுதிகளில் தகவல் பலகை வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruthuraipoondi ,Consumer Protection Center ,Mettur dam ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...