காவேரிப்பட்டணம், மே 5: காவேரிப்பட்டணத்தில் நீட் தேர்வு மையத்தில் தவித்த மாற்றுத்திறனாளி மாணவியை, தாசில்தார் தனது காரில் அழைத்துச் சென்று பஸ் ஏற்றி விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. 480 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், 133 மாணவர்கள் மற்றும் 325 மாணவிகள் தேர்வு எழுதினர். 22 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முடிந்ததும் மாணவ- மாணவிகள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, ஒரு மாற்றுத்திறனாளி மாணவி பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதனைக்கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்தனர். அப்போது, அவரை தேர்வறையில் விட்டு விட்டு, பெற்றோர் முன்னதாகவே வீட்டிற்கு சென்று விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் வீடு திரும்ப ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
The post மாற்றுத்திறனாளி மாணவியை காரில் அழைத்து சென்ற தாசில்தார் appeared first on Dinakaran.
