×

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட்தேர்வில் 1,778 பேர் பங்கேற்பு

 

ராமநாதபுரம், மே 5: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 5 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 1,778 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு ராமநாதபுரம் அண்ணா பல்கலையில் 236 பேர், சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 360 பேர், ராமநாதபுரம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் 360 பேர், பரமக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 600 பேர், மண்டபத்தில் உள்ள கேந்திர வித்யாலய பள்ளியில் பேர் 288 என ஆகிய 5 மையங்களில் மொத்தம் 1,844 பேர் தேர்வுக்காக அனுமதிப் பெற்றிருந்தனர். இதில் 1,778 பேர் தேர்வில் பங்கேற்றனர். 66 பேர் பங்கேற்கவில்லை.

தேர்வர்கள் காலை 10 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வரத் துவங்கினர். ஹால் டிக்கெட்டுடன், ஆதார் அட்டையும் சரிபார்க்கப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு பகல் 2 மணிக்கு துவங்கியது. முன்னதாக தேர்வுக்கு வந்த மாணவ,மாணவிகளிடம் தலை கிளிப், நகைகள், கடிகாரம், பெல்ட் போன்றவை வழக்கம் போல அணியத் தடை விதிக்கப்பட்டது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட்தேர்வில் 1,778 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,MBBS… ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை