குமாரபுரம், மே 5: அழகிய மண்டபம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பார் இல்லாத தால் டாஸ்மார்க் கடைக்கு நடந்து செல்லும் வழியில் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு கப்பு, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், தின்பண்டங்களை அப்படியே வீசி விட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், உணவு கழிவுகள் குவிந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி மது பிரியர்கள் டாஸ்மாக் கடைக்காரர்களிடம் பலமுறை கூறியும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. மேலும் திறந்த வெளியை பாராக்கி கண்ட இடங்களில் குப்பைகளை வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அழகிய மண்டபம் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.
