- மதுரை-தேனி சாலை
- மதுரை
- மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலை
- தேசிய நெடுஞ்சாலை
- ராமேஸ்வரம்
- கொச்சி…
- மதுரை-தேனி
- தின மலர்
மதுரை, மே 5: மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் முடியும் வரை, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கொச்சி வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாக பயணிக்கிறது. இதில், மதுரை – தேனி மார்க்கம் மேற்கு மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாகவும் உள்ளது.
இச்சாலையில், எச்எம்எஸ் காலனி சந்திப்பில் மதுரை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் கடந்த இரு வாரங்களாக நடந்து வருகின்றன. இதற்காக பிரதான சாலையில் உள்ள எச்எம்எஸ் காலனி சந்திப்பில் மெகா சைஸ் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இச்சாலையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பஸ் மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருவதற்கே கடும் சிரமமாக உள்ளது. இதில், மேற்கு மாவட்டங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் சம்பந்தப்பட்ட சந்திப்பை அடைகின்றன.
அப்போது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கும் பணிகள் முடிவுக்கு வரும் வரை அச்சம்பத்து பைபாஸ் சாலையிலிருந்து முடக்குச் சாலை வரை லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மதுரை – தேனி சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் appeared first on Dinakaran.
