- அழகர்கோவில் கள்ளழகரின் சித்திரை திருவிழா
- மதுரை
- சித்திராய் திருவிழா
- அழகர் கோவில்
- கல்லழகரா
- கொண்டப்பா
- நாயக்கர் மண்டபம்
மதுரை, மே 5: மதுரையில் பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரை பெருந்திருவிழா வருகிற மே 8ம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து மே 10ம் தேதி மாலை கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். பின்னர் வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். இந்த திருவிழாவையொட்டி கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து வண்டியூர் வரை சென்று இந்த வழியில் அமைந்துள்ள 492 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். பின்னர் அவர் மீண்டும் கோயில் வந்து சேர்கிறார்.
இந்த பயணத்தில் அவரை தரிசனம் செய்ய திரளும் லட்சக்கணக்கான பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 39 தற்காலிக உண்டியல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை அழகர்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 23 தள்ளுவண்டி உண்டியலும், 16 பெட்டி உண்டியல்களும் இருக்கின்றன. இந்த உண்டியல்கள் கள்ளழகர் மதுரைக்கு வந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பி செல்லும் வரை அவருடன் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த உண்டியல்கள் அனைத்தும் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
The post அழகர்கோவில் சித்திரை திருவிழா கள்ளழகருடன் பயணிக்க 39 உண்டியல்கள் தயார் appeared first on Dinakaran.
