×

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு

 

மேட்டுப்பாளையம், மே5: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருவதோடு மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் அருகில் உள்ள விளைநிலங்களுக்கு புகுந்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று மேட்டுப்பாளையம் அடுத்துள்ள உப்பு பள்ளம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உலா வந்தது. இதனை கண்ட தெரு நாய்கள் மானை துரத்தி தாக்கியதில் மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று நாய்கள் தாக்கியதில் உயிரிழந்த மானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

The post நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது