- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாண்டிச்சேரி
- கேரளா
- கர்நாடக
- ஆந்திரப் பிரதேசம்
- சிவகுமார் ஆர்த்தி
கோவை, மே 5: கோவையில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலஙங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் ஆர்த்தி கரன் தம்பதியரின் மகன் தனிஷ்குமார் கலந்து கொண்டார்.
இவர் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற மாணவன் தனிஷ்குமார் நடைபெற்ற ஆறு சுற்றுகளில் மொத்தம் 4.5 புள்ளிகள் பெற்று மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றார். இவருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவன் தனிஷ்குமாரை பயிற்சியாளர் சதீஷ் தன் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.
The post சதுரங்க போட்டியில் கோவை மாணவன் அசத்தல் appeared first on Dinakaran.
