×

வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

 

கோவை, ஜன. 14: கோவையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை சிவானந்தா காலனி டாடாபாத் முதல் வீதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (23). துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் ரத்தினபுரி ராஜூ நாயுடு தெருவில் சரக்கு வாகனத்தில் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், லோகேஸ்வரனிடம் நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி, இங்கு வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் தனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டினார்.

அவர் கொடுக்காததால் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை கத்திமுனையில் பறித்து கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்து லோகேஸ்வரன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், மாமூல் கேட்டு பணம் பறித்தது ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சேர்ந்த லாரன்ஸ்(28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.1000, ஒரு கத்தி, ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Coimbatore ,Lokeswaran ,Dadabad First Street, Sivananda Colony, Coimbatore ,Ratnapuri Raju… ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது